புகையிலை பொருட்கள் விற்ற
பெண் உள்பட ஈரோட்டில் 2 பேர் கைது
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, வெள்ளோடு பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், வெள்ளோடு – பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வெள்ளோடு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அந்தக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடையின் உரியமையாளரான கே.கே.வலசு பகுதியை சேர்ந்த கடை உரிமையாளரான முருகேசன் (55) மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோல, வெள்ளோடு-ஈரோடு ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனையிட்டதில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடையின் உரிமையாளரான, கள்ளுக்கடை மேடு பகுதியை சேர்ந்த லட்சுமி (67) மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், இருவரது கடைகளிலும் இருந்து 310 கிராம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.