ஈரோடு மாநகராட்சி 2-ம் மண்டல அலுவலகத்தில் மண்டலத்தலைவர் காட்டுசுப்பு (எ)மு.ப.சுப்ரமணியம்
சமத்துவ பொங்கல் விழாகொண்டம்
ஈரோடு மாநகராட்சி 2-ம் மண்டல அலுவலகத்தில் மண்டலத்தலைவர் காட்டுசுப்பு (எ)மு.ப.சுப்ரமணியம் மதலைமையில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையாளர் விஜயகுமார், உதவி
செயற்பொறியாளர் பாஸ்கர், இளநிலைப்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆ.ஜெகதீசன், வனிதாமணி, செந்தில்குமார், புவனேஸ்வரி, தீபலட்சுமி ஆகியோர்கள் மற்றும் 2-ம் மண்டல துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், மகளிர்சுய உதவிக்குழுவினர்கள், மற்றும் தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் சமத்துவ பொங்கல் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல், சுண்டல், புளிசாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம் வழங்கப்பட்டது.