பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்குத் தொகுதிகாங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈவெராவின்தந்தைஇடைத் தேர்தல் ஈவிகேஎஸ்இளங்கோவன் போட்டியிட?
வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா மறைந்த நிலையில், அத்தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
ஈரோடு கிழக்குத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவால் கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இதனை அடுத்து அத்தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா, அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் யுவராஜாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.