Type Here to Get Search Results !

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 238 வாக்குசாவடி மையங்களில் பயன் படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியினை கணினி வழியில் துவங்கி வைத்தார்*.

*98 - ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு நாளன்று 98 - ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 238 வாக்குசாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியினை கணினி வழியில் துவங்கி வைத்தார்*.
98 - ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு நாளன்று 98 - ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 238 வாக்குசாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியினை இன்று கணினி வழியில் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 98 ஈரோடு கிழக்கு - சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 27.02.2023 அன்று நடைபெறவுள்ளது. 98 - ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் {EVM & VVPAT) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் வாக்குச் சாவடிகளில் 98 - ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக கட்டுப்பாட்டு இயந்திரங்களில் 467 286 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் (control Unit), 474 வாக்குப்பதிவு இயந்திரங்களில் 286 வாக்குப்பதிவு இயந்திரங்களும் (Ballot Unit), 467 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களில் 310 இயந்திரங்களும் (VVPAT) என மொத்தம் 882 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 30 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடாகவும் கணினி சுழற்சி முறை (Randomization)-யில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் .க.சிவகுமார், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதிஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ், குருநாதன் (கணக்குகள்) தேர்தல் வட்டாட்சியர் சிவகாமி, விஜயகுமார் (வட்டாட்சியர், பேரிடர் மேலாண்மை), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன், கணினி நிரலாளர் வெங்கடேஷன் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.