Type Here to Get Search Results !

கும்பகோணத்தில் 20 அடி உயரம் 8 அடி அகலம் கொண்ட சுவாமி விவேகானந்தர் முழு திருவுருவ சிலையை திறந்துவைக்கப்பட்டது

20 அடி உயரம் 8 அடி அகலம் கொண்ட சுவாமி விவேகானந்தர் முழு திருவுருவ சிலையை ராமகிருஷ்ண மடம் தலைவர் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான ஸ்தாபகர் ஆகியோர் திறந்து வைத்தனர். 
கும்பகோணம் அருகே 
கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான் தட்சிணபண்டரிபுரத்தில்
20 அடி உயரம் 8 அடி அகலம் கொண்ட சுவாமி விவேகானந்தர் முழு திருவுருவ சிலையை ராமகிருஷ்ண மடம் தலைவர் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான ஸ்தாபகர் ஆகியோர் 
திறந்து வைத்தனர். 
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான் தட்சிணபண்டரிபுரமாக போற்றப்படுகிறது.இங்கு விஸ்வ வித்யாலயா பாடசாலை தொடங்கப்பட்டு செயல்படுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயில்கின்றனர்.கோயில் மற்றும் பாடசாலை வளாகத்தில் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது திரு உருவம் பிரதிஷ்டை செய்து திறப்பு விழா நடைபெற்றது. சேங்காலிபுரம் பிரம்ம 
ஸ்ரீ ராம தீட்சதர் குத்துவிளக்கேற்றினார். பைபரால் செய்யப்பட்ட 20 அடி உயரம் 8 அடி அகலம் கொண்ட சுவாமி விவேகானந்தர் முழு திருவுருவ சிலையை தஞ்சை ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான ஸ்தாபகர் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் அம்மன் பேட்டை ராமகிருஷ்ணா ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி சொரூபானந்தா மகராஜ் சுவாமி விவேகானந்தரின் லட்சியம் குறித்து பேசினார். ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்தா டிரஸ்ட் செயலாளர் வெங்கட்ராமன் தொடக்க உரையாற்றினார். இதில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலின், பாஜக மாவட்ட தலைவர் சதீஷ்குமார், அதிமுக ஒன்றிய செயலாளர் அசோக்குமார், பாஜக மூத்த நிர்வாகி அண்ணாமலை, நகர பொருளாளர் வேதம் முரளி, உட்பட பலர் கலந்து கொண்டனர். விட்டல் ருக்மணி விஸ்வ வித்யாலயா மாணவர்களின் சார்பில் விவேகானந்தரின் வரலாற்றை நினைவு கூறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மேலை நாடுகள் பலவற்றில், பாரத பாரம்பரிய பெருமைகளை நிலைநாட்டிய பின்னர் ராமேஸ்வரம் வந்தடைந்து நாடு திரும்பியதும், அங்கிருந்து ரயில் மூலம் கும்பகோணம் வந்த அவர், 1897ம் ஆண்டு பிப்ரவரி 3, 4 மற்றும் 5ம் தேதி ஆகிய 3 நாட்கள் இங்கேயே தங்கியிருந்து சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.