ஈரோடுஏ.ஈ.டி.கல்விநிறுவனங்களின் தலைவர் காசியண்ண கவுண்டர் 17/01/2023 நேற்று காலமானார்
ஈரோடு ஏ.ஈ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் காசியண்ண கவுண்டர் (வயது 83) வயது மூப்பின் காரணமாக, ஏ.ஈடி. பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். கீழ்பவானி முறைநீர் பாசன சபை தலைவராகவும், ஈரோடு மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் பொருளாளரும் காசியண்ண கவுண்டர் இருந்தார்.
அவருடைய உடலுக்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாள் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அவருடைய உடலுக்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏ.ஈ.டி. கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளிக்கூட முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். காசியண்ண கவுண்டர் உடல் நல்லடக்கம் இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு ஏ.ஈ.டி. பள்ளிக்கூடம் அருகில் நடைபெற உள்ளதாக அவருடைய சகோதரி மகன் ஏ.ஈ.டி. மோகனா ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
_______