Type Here to Get Search Results !

ஜனவரி 17ஆம் தேதி சனிப்பெயர்ச்சி பலன்கள்:

ஜனவரி 17ஆம் தேதி சனிப்பெயர்ச்சி பலன்கள்:
சனி பகவானின் ஆட்சி வீடு கும்ப ராசி ஆகும். மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சனிபகவான் தற்போது திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17ஆம் தேதி (நாளை) கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். அதேபோல் ஜனவரி 30ஆம் தேதி சனி பகவானுக்கு அருகில் சூரியன் வரும் போது அஸ்தமனம் அடைகிறார். பிறகு மார்ச் மாதம் 6ஆம் தேதி சனி பகவான் உதயமாகிறார். 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி வக்ர மடையும் சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி மீண்டும் நேர்கதியில் பயணம் செய்வார் .
______________________________________
இந்த ராசி மாற்றம் அவிட்ட நட்சத்திரத்தில் நடக்கும். சனி சஞ்சரித்தவுடன், 5 ராசிக்காரர்களுக்கு தொடர்ச்சியான தொல்லைகள் தொடங்கும், ஏனெனில் இந்த நபர்களுக்கு ஏழரை சனி, சனி தசை தொடங்கும். அப்படிப்பட்ட நிலையில் அந்த ராசிக்காரர்கள் எவை, சனிபகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்க என்னென்ன வழிகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்.
_____________________________________
மகர ராசி உத்திராடம் 2,3,4 பாதங்கள் திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள் அடங்கியது மகர ராசி. உங்கள் ராசியில் இருந்த சனி பகவான் ராசியிலிருந்து விலகி இரண்டாம் இடமான தன ஸ்தானமான கும்ப ராசிக்கு செல்ல உள்ளார். அத்தகைய சூழ்நிலையில், எந்த வித அலட்சியத் தனமான செயல்களையும் செய்யாதீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக தேவை. கௌரவம் கெட்டுப் போகலாம்.
__________________________________________

விருச்சிக ராசி
விருச்சிக ராசி லக்னத்திற்கு சனி மூன்று மற்றும் நான்காம் பாவகத்திற்கு அதிபதி. இதனால் சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்படலாம். இதனால் குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். நிதி பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
__________________________________

கும்ப ராசி
சனி 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் இடப் பெயர்ச்சி அடைகிறார். இப்படிப்பட்ட நிலையில் இந்த ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தின் அடிப்படையில் மோசமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செலவுகள் அதிகரிப்பதால் பொருளாதார நிலை பாதிக்கப்படும். வீட்டில் சூழ்நிலை மோசமாக இருக்கும் மற்றும் தொழில் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
_______________________________________
கடக ராசி
சனி ராசி மாற்றத்தின் தாக்கம் கடக ராசிக்காரர்களுக்கும் இருக்கும். ஆரோக்கியத்தில் மோசமான விளைவு ஏற்படலாம். வேலை அல்லது பணியிடத்தில் கடினமான சூழ்நிலைகள் ஏற்படும். பண இழப்பு காரணமாக, நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
____________________________________________

மீன ராசி
சனி பெயர்ந்தவுடன் மீன ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பேச்சிலும் கோபத்திலும் கட்டுப்பாட்டை வைத்திருங்கள், இல்லையெனில் தேவையற்ற சச்சரவுகளில் சிக்கிக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்றே இந்த சனி பெயர்ச்சி மூலமாக தெரிய வருகிறது .

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.