இந்து சமய அறநிலைத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி கூறியதாவது:-
ஈரோடு மண்டலத்தில் உள்ள வருவாய் இல்லாத சிறிய கோவில்களாக இருக்கும் ஆதிதிராவிடர் பகுதி மற்றும் கிராம கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. அந்த வகையில் மண்டலத்தில் உள்ள ஈரோடு , நாமக்கல் மாவட்டத்தில் 149 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 35 கோவில்கள், ஆதிதிராவிடர் பகுதியில் 50 கோவில்களும் நாமக்கல் மாவட்டத்தில் 64 கோவில்கள் என மொத்தம் 149 கோவில்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் என ரூ.2.98 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.