மதுவிற்ற 14 பேர் கைதுஈரோட்டில் அனுமதியின்றி போலீசார் அதிரடி நடவடிக்கை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து மது பாட்டில்களும், பணம் ,வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஈரோடு ரெயில்வே நிலையம் பகுதியில் உள்ள பேக்கரி கடை அருகே வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் வழத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆத்மநாதன் (34) என்பதும் அனுமதி இன்றி மது விற்பனை ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ஈரோடு டவுன் பகுதி, சூரம்பட்டி, கருங்கல்பாளையம், கோபிசெட்டிபாளையம், கடத்தூர் கடம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி மது விற்றதாக ஒரே நாளில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 46 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.