பாதுகாப்பு பணிக்கு தாமதமாக வந்த 13 போலீசார் இடமாற்றம்
பொங்கல் தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்க வலியுறுத்தி சித்தோடு நால்ரோடு பகுதியில் நேற்று பாரதிய ஜனதா விவசாய அணி சார்பில் கவனியிருப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான பாதுகாப்பு பணிக்கு செல்ல கோபி மற்றும் பெருந்துறை சப்-டிவிஷனில் போலீசார் காலை 6 மணிக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டது . ஆனால் 13 போலீசார் தாமதமாக ஆஜராகினர். தாமதமாக பணிக்கு வந்த இவர்கள் ஆணைக்கல்பாளையம் ஆயுதப் படைக்கு இடமற்றம் செய்யப்பட்டுள்ளனர்.