Type Here to Get Search Results !

பெருந்துறை To ஈரோடு ரோடுவாய்க்கால் மேடு கீழ் பவானி வாய்க்கால் கரை மேற்க்கு புறம் உடைந்து வாய்க்கால் தண்ணீரானதுவெளியேறிக் கொண்டிருக்கிறது*

*பெருந்துறை To ஈரோடு ரோடு நந்நா கல்லூரி வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப் அருகே கீழ் பவானி வாய்க்கால் கரை மேற்க்கு புறம் உடைந்து வாய்க்கால் தண்ணீரானதுவெளியேறிக் கொண்டிருக்கிறது*

ஈரோடு பெருந்துறை, வாய்க்கால்மேடு பகுதியி்ல் 54ஆவது மைல் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலின் வலதுகரை பகுதியில்நேற்றுமாலை6.30மணி யளவில்   உடைப்பு ஏற்பட்டது*.

வாய்க்காலில் 1300 கனஅடி வீதம் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் நீரின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் உடைப்பு ஏற்பட்டதும் பயங்கர வேகத்துடன் தண்ணீர் வெளியேறத் தொடங்கியது.
வாய்க்கால் உடைந்தது குறித்து கேள்விப்பட்ட மக்கள் அப்பகுதியில் குவிந்தனர். 

 இந்நிலையில்இந்த வாய்க்கால் தண்ணீர் அதிவேகமாக பாய்ந்ததால் அருகாமையி் உள்ள நல்லாம்பட்டி,முள்ளம்பட்டி வாய்க்காலின் மதகுகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து வாய்க்காலில் இருந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்த நிலையில்  இடதுகரை வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.

கீழ்பவானி வாய்க்காலை பொருத்தவரை இடதுகரையில் தான் ஆயக்கட்டு பாசனம் பெறுகிறது. இதனால் அதிகவேகத்துடன் சென்ற தண்ணீர் அப்பகுதியில் பயிரிட்டுள்ள நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பயிர்களை மூழ்கடித்தது. தற்போது வாய்க்காலில் இருந்து வெளியேறும் தண்ணீர் முழுக்க சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்களை மூழ்கடித்துள்ளது. 
*எங்கு நோக்கிலும் வெள்ளநீர் சூழ்ந்து விளைநிலங்கள் அனைத்தும் சேதமடைந்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.*
*ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி
இரவு 10.30 மணி அளவில், வந்து பார்வையிட்டார்
ஈரோடு மாவட்டம்,  பெருந்துறை வட்டம் திருவாச்சி கிராமம், 
 எல் பி பி மெயின் வாய்க்கால்  வலது மற்றும் இடது கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதி மற்றும் மேற்படி LBP வாய்க்கால் நீர் செல்லும் மூலக்கரை, தோட்டானி, கதிரம்பட்டி கிராமங்களின் ஓடை பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்..

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.