பட்டியல் இன மாணவர்களை கழிவறை சுத்தம் செய்யவைத்த தலைமை ஆசிரியர் மீது வன்கொடுமையில் வழக்கு பதிவு செய்யக களத்தில் .... தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனி மற்றும் PUCL அமைப்பு
December 01, 2022
0
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் துடுப்பதி ஊராட்சி துடுப்பதி பாலக்கரை உள்ள அரசு ஆரம்ப பள்ளி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் சுமார் 40ம் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகிறார்கள் இப்பள்ளிக்கு அருகே உள்ள இந்திரா நகர் ஆகிய ஊர்களை சார்ந்த பட்டியல் இன மக்கள் குழந்தைகள் பள்ளியில் பயின்றுவருகிறார்கள்
இப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயன்படுத்த ஒரே கழிப்பறை தான் உள்ளது மாணவிகள் பயன்படுத்தும் மற்றொரு கழிப்பறையினை அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்
இங்கு பயிலும் பட்டியல் இன மாணவர்களில் 4 ஆம் வகுப்பு 5 வகுப்பு படிக்கும் மாணவர்கள் தான் இந்த கழிவறை தொடர்ந்து சுத்தம் செய்து வருகிறார்கள் கழிவறையினை சுத்தம் செய்ய மாணவர்களை அங்கு உள்ள தலைமை ஆசிரியர் கீதா என்பவர் தொடர்ந்து வலியுறுத்தியும் பள்ளி மாணவர்களை கழிவறையினை சுத்தம் செய்ய வேண்டும் என கூறி உள்ளார் இதனால் இங்கு படிக்கும் மாணவர்கள் தான் கழிவறையினை தினம் சுத்தம் செய்து வருகிறார்கள் படிக்கும் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய செய்யும் தலைமை ஆசிரியர் மீது பட்டியல் இன மாணவர்கள் என்பாதல் இது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை ஆகும் இது குறித்து தாங்கள் உரிய விசாரனை நடத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க தலைமை ஆசிரியர் மீது SC ST வன்கொடுமையில் வழக்கு பதிவு செய்யவும் என வலியுறுத்தி பெருந்துறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு கொடுக்கப்பட்டது
இது குறித்து சம்பவஇடத்துக்கு வருகை புரிந்த பெருந்துறை காவல் உதவி கண்கானிப்பாளர் அவர்களும் விசரானை செய்தார் உடனே வழக்கு பதிவு செய்து தருவதாக உறுதி அளித்தார்
Tags