கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், ஈரோடு மண்டல மேலாளர் தகவல்
இன்று ஈரோடு மாவட்டத்திற்கு ஐ.பி.எல் உர நிறுவனம் மூலம் 1130 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் சரக்கு இரயிலின் மூலம் வரப்பெற்றது. இதில் ஈரோடு மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட 980 மெட்ரிக் டன் உரங்களில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய, ஈரோடு கிளை நிறுவனத்திற்கு 500 மெட்ரிக் டன் வழங்கப்பட்டு அந்த உரங்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விநியோகிக்க லாரிகள் மூலம் அனுப்பப்பட்டது. விவசாயிகள் இந்த உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பெற்று பயன் அடையலாம் என ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய, ஈரோடு மண்டல மேலாளர் ஆகியோர் தெரிவித்தனர்.