Type Here to Get Search Results !

மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடம் நிரப்ப நடவடிக்கை: அமைச்சர்

மாற்றுதிருநாளி களுக்கான 4சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ் முத்துசாமி கூறினார் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி ஈரோடு நந்தா கலைக் கல்லூரியில் சுமார் ஆறு லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலி மற்றும் உபகரணங்களை மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் அவர் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 78 மாற்றுத்திறனாளிகளுக்கு ஈரோடு மாவட்டத்தில் சித்தோடு பகுதியில் கடந்த காலத்தில் பட்டா வழங்கப்பட்டது அது அவர்கள் வாழத் தகுதியற்ற இடம் என்பதால் கலெக்டர் மூலமாக வேறு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதே போன்று ஒவ்வொரு தாலுகாவிலும் அங்குள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் கண்டறியப்பட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியம் உயர்த்த மற்றும் இதர கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் மாவட்டத்தில் கடந்த ஒரு வருட காலத்தில் 134 முகாம்கள் நடத்தப்பட்டு 4,284 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது இம்முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின்அடிப்படையில் மாற்று திறனாளிகள் நலத்துறை மூலம் ரூபாய் இரண்டாயிரம் பெற தகுதியுள்ள 1526 மாற்றுத்திறனாளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதுநிதி கிடைத்ததும் ரூபாய் 2000 வழங்கப்படும் கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த 26. 10. 2022ல் நடைபெற்றது 145 விண்ணப்பங்கள் பெறப்பட்டன பெரும்பாலும் விண்ணப்பங்கள் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்டது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தமிழகத்திலே அதிகளவில் ஆவின் நிறுவனத்தின் மூலம் 17 மாற்றுத்திறனாளிகள் பாலகம் அமைக்க தலா ரூபாய்50000 வழங்கப்பட்டதுஈரோடு மாவட்டம் மத்திய கூட்டுறவுவங்கியின் மூலம் தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் இருந்து 762மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 3.20 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது கலெக்டர் எச் கிருஷ்ணன் உன்ணி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.