ஈரோடு கால்நடை மருத்துவமனை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ,
ஈரோடு கால்நடை மருத்துவமனை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
உட்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.,
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழிக்கும் அரசாணை, 152, 139 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை, 115ஐ ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர் புற நுாலகர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள் உள்ளிட்ட பல ஆயிரம் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.
முடக்கி வைக்கப்பட்ட டீ.ஏ., – ஈட்டிய விடுப்பு, சரண்டர் போன்றவற்றை உடன் வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து, உரிய காப்பீடு தொகையை வழங்க வேண்டும், என வலியுறுத்தினர்.இதேபோன்ற அனைத்து இடங்களிலும்ஆர்ப்பாட்டம், செய்தனர்
தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் நடந்தது.மாவட்டநிர்வாகிகள்செந்தில்நாதன்,மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் தலைமை வகித்தார். குமரவேல், ரமேஷ், பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
–––––––––––