ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட பிரச்சார ஊர்தி: அமைச்சர் துவக்கி வைத்தார்
December 05, 2022
0
ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட பிரச்சார ஊர்தி: அமைச்சர் துவக்கி வைத்தார் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் சார்பில் நடப்பு ஆண்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் (food and nutrition security) சத்துமிகு சிறுதானியங்கள் (nutri cereals) என்னும் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் ரூபாய் 91.8 லட்சம் செலவில்செயல்படுத்தப்பட உள்ளது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறினார் இதற்காக நான்கு பிரச்சார ஊர்திகளை அவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார் திட்டத்தின் கீழ் சோளம் கம்பு ராகி வரகு குதிரைவாலி போன்றசிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு இதன் மூலம் எற்படுத்தப்படும். 80 இடங்களில் பிரச்சார உறுதிகள் இயக்கப்படும். இந்த ஊர்திகளில் சிறுதானியங்களின் சிறப்புகள் மானிய விபரங்கள் பயிர் பாதுகாப்பு மக்காச்சோள படைப்புழுகட்டுப்பாடு முறைகள் உள்ளிட்ட விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சிறுதானியம் குறித்தான ஒலிபெருக்கி விளம்பரங்கள் செய்யப்படும். துண்டறிக்கை விவசாயிகளுக்கு தரப்படும் .மாவட்டத்தில் 14 வட்டாரங்களிலும் இந்த ஊர்திகள் செல்லும் ரூ 91.8லட்சத்தில் 16 லட்சம் இந்த பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும்.எஞ்சியவை விவசாயிகளுக்கு மானியமாக ஈடுபொருட்கள்வாங்க அளிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
Tags