Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்ட குற்றப்பத்திரிகை கூடம், மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மற்றும் மாவட்ட தனிப்பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களை ஆய்வு செய்தார்.

கோவை சரசு டி.ஜஜி முனைவர் எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப., ஈரோடு மாவட்ட குற்றப்பத்திரிகை கூடம், மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மற்றும் மாவட்ட தனிப்பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களை ஆய்வு செய்தார்.
 இன்று 22.12.2022 ஆம் ஆண்டு கோவை சரக டி.ஜ.ஜி முனைவர் எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப.,  ஈரோடு மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஈரோடு மாவட்ட குற்றப்பத்திரிகை கூடம், மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு  மாவட்ட தனிப்பிரிவு ஆகிய அலுவலகங்களை ஆய்வு செய்தார்.

 இவ்வலுவலக பதிவேடுகள், கோப்புகள் - பராமரிப்பு மற்றும் வழக்குகள் கண்டுபிடிப்பு ஆகியவைகளை ஆய்வு செய்து நற்பணிக்காக பாராட்டினார்.  மேலும் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குடும்ப நலன் பற்றி விசாரித்தார்.

 இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட எஸ்பி டாக்டர். வி.சசிமோகன், இ.கா.ப., ஏடிஎஸ்பி தலைமையகம் கே.  பாலமுருகன், CWC -A கனகேஸ்வரி, ADSP, CCW ,P ஜானகிராம், DCB DSP , G. அண்ணாதுரை, DCRB DSP திரு.S சேகர், SJHR DSP ,G.நீலகண்டன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் முனைவர்.டி.கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.