Type Here to Get Search Results !

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் ஈதூகா வீதியில் தர்மசாஸ்தா அய்யப்பன் மற்றும் விநாயகர், முருகன், கருப்பண்ணசாமி, மஞ்சமாதா கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முன்தினம்

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் ஈதூகா வீதியில் தர்மசாஸ்தா அய்யப்பன் மற்றும் விநாயகர், முருகன், கருப்பண்ணசாமி, மஞ்சமாதா கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதைத்தொடர்ந்து பகல் 11 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் யாக பூஜைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு வாஸ்து பூஜை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 8.15 மணிக்கு தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அய்யப்பனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யப்பனை தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) முதல் மண்டல பூஜை தொடங்குகிறது
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.