சொத்துவரி மின்கட்டனம் மற்றும் பால்விலை உயர்வினை திரும்ப பெறக்கோரியும் கோபில் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
December 13, 2022
0
சொத்துவரி மின்கட்டனம் மற்றும் பால்விலை உயர்வினை திரும்ப பெறக்கோரியும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டினால் மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்தும் கோபிசெட்டிபாளையம் ஒன்றிய அதிமுக மற்றும் சார்பு அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் பால் மின்சாரம், வீட்டு வரி மற்றும் சொத்து வரி ஆகியவற்றின் கட்டனத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வினை கண்டித்து
தமிழகம் முழுவதும் உள்ள
ஒன்றிய பகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் கோபி ஒன்றியதை சேர்ந்த அதிமுகவின் சார்பில் கோபி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது்
கோபி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மௌதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூடியிருந்த தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் திமுக அரசின் விலை வாசி உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் மற்றும் அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Tags