கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வார்டுகளில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுடன் கூடிய தண்ணீர் தொட்டிகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வார்டுகளில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 18 லட்சம் மதிப்பீட்டில்
புதிய ஆழ்குழாய் கிணறுடன் கூடிய தண்ணீர் தொட்டிகள் பணிகள் நிறைவடைந்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோபி நகர செயலாளர் ப்ரிணியோ கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
கோபி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கலந்துகொண்டு
வேலுமணி நகர் மற்றும் ஜோதிநகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில்
புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய தண்ணீர் தொட்டியினை
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியபாமா,காளியப்பன் மற்றும் கோபி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மௌதீஸ்வரன் ஒன்றிய செயலாளர் குறிஞ்சி நாதன் கோபி நகர் மன்ற உறுப்பினர்கள் முத்துரமணன் , காரத்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.