ரெப்கோ வங்கியில் சிறப்பு அடமானக் கடன் மற்றும் நகைக்கடன் முகாம்
December 05, 2022
0
ரெப்கோ வங்கியில்
சிறப்பு அடமானக் கடன் மற்றும் நகைக்கடன் முகாம்
ஈரோடு - மேட்டூர் ரோட்டில் ஜே.பி.பிளாசா முதல் தளத்தில் இந்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. தற்பொழுது அசையா சொத்தின் பெயரில் சிறப்பு அடமானக் கடன் முகாம் 05-12-2022 அன்று திரு.என்.சிவனேசன், மாநில இணை செயலாளர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். திரு.பா.செல்லக்குமார் (வழக்கறிஞர்) விழாவை சிறப்பித்தார் மற்றும் ரெப்கோ வங்கி, ஈரோடு கிளையின் இணை பொது மேலாளர் திரு.டி.ராஜேந்திரன் அவர்கள் முன்னிலை வகுத்தார். இந்த முகாம் 05-01-2023 வரை நடைபெற உள்ளது. வரையிலான வழங்கப்படும். முகாமின் சிறப்பம்சமாக ரூ.5 லட்சம் முதல் ரூ.20 கோடி கடன் தொகைக்கு உடனடி கடன் அனுமதிக் கடிதம்
மேலும், கடனுக்கான நடைமுறை கட்டணத்தில் 50% சிறப்பு தள்ளுபடியுடன் மிக குறைந்த வட்டியில் 9.6% முதல் வங்கி ஒப்புக்கொள்ள கூடிய அனைத்து தேவைகளுக்கும் மிக துரிதமாக கடன் வழங்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து, சிறப்பு நகைகடன் முகாமும் நடைபெறுகிறது. இந்த சிறப்பு நகைக்கடன் முகாமில் நகைக்கடன் கிராம் ஒன்றுக்கு ரூ.3,900.00 வரை ரூ.0.77 பைசா வட்டியில் தனிநபர் உச்ச வரம்பின்றி வழங்கப்படுகிறது. முகாமையொட்டி நகைக்கடன் பெறுவோருக்கு நகை மதிப்பிட்டாளர் கட்டணமும், நடைமுறைக் கட்டணமும் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
Tags