Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்டத்தில் இருந்து இலவச வேட்டி, சேலை அனுப்பும் பணி தொடங்கியது

ஈரோடு மாவட்டத்தில் இருந்து இலவச வேட்டி, சேலை அனுப்பும் பணி தொடங்கியதுதமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. மாநில அளவில் 17,455 தறிகளில் 1 கோடியே 26 லட்சத்து 19,004 வேட்டிகள், 21,389 தறிகளில் 99 லட்சத்து 56,683 சேலைகள் உற்பத்தி செய்ய ஆர்டர் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 61 லட்சத்து 29,000 சேலைகள், 69 லட்சத்து 2,000 வேட்டிகள் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதுபற்றி ஈரோடு கைத்தறி துறை உதவி இயக்குனர் சரவணன் கூறியதாவது:- பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்களுக்கு வழங்க இலவச வேட்டி, சேலையின் மொத்த ஆர்டரில் 80 சதவீத ஆர்டர் ஈரோடு மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது. 49 சொசைட்டிகளில் உற்பத்தியாகின்றன
ஈரோடு சரகத்துக்கு ஒதுக்கப்பட்ட 61 லட்சம் சேலைகளில் இதுவரை 45 லட்சம் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு விட்டன. அவை தரமாக உள்ளதா என ஆய்வு செய்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் வகையில் தயார் நிலையில் உள்ளன. அதுபோல 69 லட்சம் வேட்டிகள் ஆர்டர் பெறப்பட்டு, 35 லட்சம் வேட்டிக்கான உற்பத்தி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள வேட்டி, சேலைகள் வரும் ஜனவரி மாதம் 20-ந் தேதிக்குள் நிறைவடையும். தற்போது 60 சதவீதம் இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணி நிறைவடைந்து விட்டது. உற்பத்தி செய்யப்பட்ட வேட்டிகள், சேலைகள் வில்லரசம்பட்டியில் உள்ள குடோனில் பேக்கில் செய்து கடந்த 3 நாட்களாக தினமும் 60 லாரிகளில் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணி முடியாது என சிலர் கூறுகின்றனர். 15 நிறங்களில் துணிகள் உற்பத்தி செய்வதால் அதற்கேற்ப நூல்கள் தயார் செய்து பெறப்பட்டுள்ளன. திட்டமிட்டப்படி முடிக்கப்படும். அதற்கேற்ப வேட்டி, சேலைகள் அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்படி திட்டமிட்டு பணிகள் நடக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.