மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பங்கேற்ற பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுன்ணி கொடியசைத்து துவக்கி வைத்தார்
பவானிசாகர் வட்டார இயக்க மேலாண்மை அலகு (மகளிர்திட்டம்) சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறுகிறது. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பங்கேற்ற பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுன்ணி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக பேருந்து நிலையம் சென்று மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் 100-க்கும் மேற்ப்பட்ட மகளிர் கலந்து கொண்டனர். மேலும் விழிப்புணர்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் எடுத்துக்கொண்டனர். பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 776 மகளிர் குழுக்கள் உள்ளன. மேலும் இங்கு உள்ள 15 ஊராட்சிகளில் ஊராட்சி 2 குழுக்கள் வீதம் முதியோர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி, குழுக்கள் ஒன்றும் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் போது,
இப்பகுதியில் என்னென்ன வளங்கள் உள்ளன என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் தொழில் செய்தால் அதிக லாபம் பெறலாம் என தெரிவித்தார். மேலும், மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் கைத்தறி சேலை, நெசவு மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் உள்ளது என்றும் இப்பகுதியில் அதிகம் விளையும் மல்லிகை மற்றும் சம்பங்கி மலர்களை குழுக்கள் வாங்கி விற்பனை செய்யவும் மற்றும் மலரிலிருந்து மதிப்பு கூட்டப் பொருட்கள் தயாரிக்கவும் விருப்பமுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்கள். மகளிர் குழுவினரால் தயாரிக்கப்பட்ட வேம்பு மூலிகை, நாப்கிள் மற்றும் மூலிகை சாம்பிராணி மற்றும் மகளிர் குழுக்கள் சொந்த தயாரிப்புகளான கைத்தறி சேலைகளையும் பார்வையிட்டார். மேலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் 1 நபருக்கு மானிய உதவியுடன் மளிகை கடை மேம்பாடு செய்வதற்கான கடன் உதவியினையும் வழங்கினார்.