ஈரோடு மாவட்டம்,பவானி சாகர்,புங்கார் ஊராட்சி முத்துராசா நகர் (சுஜ்ஜில் குட்டை) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுன்ணி ஆய்வு
பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடி அங்கு செயல்படுத்தப்படும் எண்ணும், எழுத்தும் திட்டம் தொடர்பாக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையினை பார்வையிட்டார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரிடம் பள்ளிக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, இப்பகுதியில் 175 குடும்ப அட்டைகள் உள்ளது எனவும் தங்கள் அருகிலுள்ள கராச்சி கோரை சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருவதாகவும் தெரிவித்தனர், எனவே இப்பகுதியில் தாய் கடையில் இருந்து பிரித்து ஒரு ரேஷன் கடை அமைப்பதற்கு கணக்கெடுக்கமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அங்கு செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பயணிகள், அங்கன்வாடி மையத்தினையும் பார்வையிட்டு குழந்தைகளுக்கு என்னெள்ள வகையான உணவுகள் வழங்கப்படுகிறது என்றும், சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சரிவிகித உணவு வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கும்படி தெரிவித்தார். அப்பகுதியில் ராமசாமி என்பவர் யானை மிதித்து கால் ஊனம் ஆகிவிட்டதால் அவருக்கு மேல் மருத்துவ சிகிச்சை கேட்டு கோரிக்கை மனு அளித்தார்.