Type Here to Get Search Results !

ஈரோட்டில் கிறிஸ்துமஸ் விழா இன்று நடைபெற்றது.இந்த விழாவில் அமைச்சர் சு.முத்துசாமி, செஞ்சி கே.மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

ஈரோட்டில் கிறிஸ்துமஸ் விழா இன்று நடைபெற்றது.இந்த விழாவில் அமைச்சர் சு.முத்துசாமி, செஞ்சி கே.மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். சர்வதேச கிறிஸ்தவ ஊழியர் கூட்டமைப்பு மற்றும் ஈரோடு மாவட்ட அனைத்து திருச்சபைகளும் இணைந்து மாபெரும் கிறிஸ்மஸ் விழா ஈரோடு கொல்லம்பாளையம் நாடார்மேட்டில் உள்ள பெத்தானியா திருச்சபை தேவாலயத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சர்வதேச கிறிஸ்தவ ஊழியர்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவரும், ஈரோடு பெத்தானியா பெல்லோஷிப் தேவாலய பேராயர் ஜென்ஷன்ஜெபராஜ் தலைமை வகித்தார். பிஷப் டாக்டர் கே.மேஷாக் ராஜா கிறிஸ்மஸ் சிறப்புரையாற்றினார். தேசிய சட்டத்துறை செயலாளர் பால் விக்டர் பேரமைப்பு பற்றிய சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ்நாடு சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். அமைச்சர்களிடம் சர்வதேச கிறிஸ்தவ ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் மனு கொடுக்கப்பட்டது.அம் மனுவில் கூறியுள்ளதாவது: திருச்சபை கட்டுமான பணிகளுக்கு அனுமதி கோரி உள்ள சபைகளுக்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மதத் தலைவர்கள் புனித தலமான எருசேலம் சென்று வர தமிழக அரசு வழங்கி வரும் மானிய நிதியில் இருந்து மேலும் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். கிறிஸ்துவ ஊழியர்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் வருகின்ற அச்சுறுத்தலுக்கு நடவடிக்கை மேற்கொண்டு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.கிறிஸ்தவ கல்லறை இடங்களை பாதுகாத்திடவும் கல்லறை இல்லாத இடங்களில் தமிழக அரசு இடம் ஒதுக்கி கிறிஸ்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும். தமிழக அரசு சிறுபான்மை மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கி இருக்கின்ற கல்வி உதவி தொகை உயர்த்தி வழங்கிட வேண்டும்.கிறிஸ்தவ வழிபாடு தலங்களுக்கு புனரமைப்பு நிதி அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும் சில விதிமுறைகளை தளர்த்தி வழங்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. சிறுபான்மையினர் நடத்திவரும் பள்ளிகளில் மத்திய அரசு வழங்கி வந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் அத்தொகை மீண்டும் கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மனுவை கொடுத்தனர். சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் ஈரோடு திமுக மாநகர செயலாளர் சுப்ரமணியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரகாஷ், திமுக பொருளாளர் பி. கே .பழனிச்சாமிஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக பர்ண பாஸ்,பீட்டர், ஆபிரகாம்,ஜீவானந்தம், மானசே, யுவராஜ், பெஞ்சமின், ஜாஸ்வா ஸ்டீபன், ஜான்சன் சார்லஸ், எசேக்கியால், எட்வின் ராஜ், ஆரோக்கியசாமி, ஆபிரகாம், பிலிப், அன்புநாதன், டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியை கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஜென்ஷன் ஜெபராஜ் தலைமையில் டேவிட் குணா, ரமேஷ் டேனியல்,சந்தோஷ்காந்தி, சுதாகர், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் பிரின்ஸ்,ஜேம்ஸ், சரவணன் லாரன்ஸ், ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இந்த விழாவில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து திருச்சபை பேராயர்கள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் சுமார் 10 கிலோ எடை கொண்ட கிறிஸ்மஸ் கேக்கினை அமைச்சர்கள் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.