ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு
December 04, 2022
0
ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம் மற்றும் ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் தொடங்கி நந்தா இயன்முறை கல்லூரி வரை சென்றடைந்தது. இப்பேரணியில் 50- க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்,
இந்நிகழ்ச்சிகளில் உதவி செயற்பொறியாளர் (மாநகராட்சி) பாஸ்கர், ஈரோடுலோட்டஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர்/ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின்பட்டயத்தலைவர் ஈ.கே.சகாதேவன் உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்கள்உடனிருந்தனர்.
Tags