பால் விலை
மின் கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வினை கண்டித்து கோபிசெட்டிபாளையம் நகர அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் பால் மின்சாரம், வீட்டு வரி மற்றும் சொத்து வரி ஆகியவற்றின் கட்டனத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வினை கண்டித்து அதிமுக வினர்
தமிழகம் முழுவதும் உள்ள
நகராட்சி பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அதன்தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சிக்குட்பட்டமொடச்சூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது்
கோபி நகர செயலாளர் ப்ரிணியோகணேஷ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூடியிருந்த தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் திமுக அரசின் விலை வாசி உயர்வுக்கு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்சியில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மௌதீஸ்வரன்
கோபி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துரமணன்
மற்றும்
நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் , தமிழ்செல்வன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.