ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக பாபா சாஹெப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் நினைவு அஞ்சலி.!
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக பாபா சாஹெப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் கே பி சின்னசாமி தலைமையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பா. ராஜேஷ் ராஜப்பா முன்னிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி. திருச்செல்வம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.!!*
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்களான ஏ. மாரியப்பன் & தீபா,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம்.ஜவஹர் அலி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ் சி துறை துணைத்தலைவர் குளம் எம். ராஜேந்திரன், மண்டலத் தலைவர்களான அல்டிமேட் தினேஷ், ஆர் விஜயபாஸ்கர், எச்.எம்.ஜாபர் சாதிக், மாவட்டத் துணைத் தலைவர்களான பாபு என்கிற வெங்கடாஜலம், பாஸ்கர் ராஜ், பொதுச் செயலாளர்களான கண்ணப்பன், கராத்தே யூசுப், இரா.கனகராஜன், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், ஈரோடு பாராளுமன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.விஜய் கண்ணா, மாநகர மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக், மாநகர மாணவர் காங்கிரஸ் தலைவர் ஆரிப் அலி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என் பாஷா, முன்னாள் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் குப்பண்ணா சந்துரு மாவட்ட நிர்வாகிகளான பால தண்டாயுதம், நூருதீன், லயன் இப்ராஹிம், ஜுபைர் அஹ்மது, அமீர்கான், ராஜாஜிபுரம் சிவா, குமரேசன், ஈரோடு கிழக்கு சட்டமன்ற சமூக ஊடகப் பிரிவு தலைவர் பிரவீன், என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, மகிளா காங்கிரஸ் துணைத் தலைவர் எம்.பேபி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.