கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அயலூர் ஊராட்சிக்குட்பட்ட கருங்கரடு பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டுவரும் கல் குவாரியை தடைசெய்ய வேண்டுமென பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். .....
December 05, 2022
0
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அயலூர் ஊராட்சிக்குட்பட்ட கருங்கரடு பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டுவரும் கல் குவாரியை தடைசெய்ய வேண்டுமென பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். .....
கோபி அருகே உள்ள அயலூர் ஊராட்சிக்குட்பட்ட கருங்கரடு பகுதியில் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது.
இந்த குவாரியின் அருகாமையில் அயலூர், கோசனம் , கோட்டுப்புள்ளாம்பாளையம் வெள்ளையகவுண்டன்புதூர் எல்லப்பாளையம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கருங்கரடு பகுதியில் செயல்பட்டு வரும் இந்த கல் குவாரியின் நிலங்கள் முழுவதும் பூமிதான இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்ட நில்வகள் என்றும் அதனை ஆக்கிரமித்து முறையான அனுமதியை பெறாமல் குவாரியை நடத்தி வருவருவதாகவும்
இரவு நேரங்களில் குவாரியில் உள்ள பாறைகளை வெடி வைத்து தகர்த்து கற்களை வெட்டி எடுக்கும் போது அருகாமையில் உள்ள கிராமங்களில் கடுமையான நில அதிர்வு ஏற்படுவதாகவும் .
எவ்வித அறிவிப்புமின்றி ஜெலட்டின் போன்ற ஆபத்தான வெடிமருந்துகளை பயன்படுத்தி வெடி வைத்து பாறைகளை தகர்க்கும் போது சிதறி வெளியேறும் கற்கள் கிராம மக்களின் கால்நடைகள் மீது விழுந்து உயிர்சேதம் ஏற்படுத்துவதாகவும்
கல்குவாரியின் அருகாமையில் வசிக்கும் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கோபி வருவாய் கோட்டாட்சியரிடமும் கோபி துணை காவல் கண்கானிப்பாளரிடமும் புகார் மனுவை அளித்தனர்.
இந்நிகழ்வில் குவாரியினால் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் பலரும் கலந்துகொண்டனர்.
Tags