Type Here to Get Search Results !

படைவீரர் கொடிநாள் நிதி வசூல்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்

படைவீரர் கொடிநாள் நிதி வசூல்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்

கொடிநாள் நிதி வசூல் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 7-ம் நாள் நாடு முழுவதும் படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட கலெக்டர்களால் படைவீரர் கொடிநாள் நிதிவசூல் பணி தொடங்கி வைக்கப்படுகிறது. அதன்படி நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி. உண்டியலில் நிதி செலுத்தி படைவீரர் கொடிநாள் நிதி வசூலினை தொடங்கி வைத்தார். மேலும், ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற ஆண்டு படைவீரர் கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ.1 கோடியே 36 லட்சத்து 76 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ.1 கோடியே 49 லட்சத்து 35 ஆயிரம் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது அரசு நிர்ணயித்த நிதி வசூல் இலக்கிற்கு ரூ.1 கோடி அதிகமாக ஈரோடு மாவட்டம் 109.2 சதவீத அளவில் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது கலெக்டர், படைவீரர் கொடிநாள் 2021 நிதி வசூலினை அதிக அளவில் வசூல் செய்த அனைத்து துறை மாவட்ட அலுவலர்களுக்கும் மற்றும் படைவீரர் கொடிநாள் நிதி வசூலுக்கு நிதி வழங்கிய பொதுமக்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டினை தெரிவித்துக் கொண்டார்.

பரிசு மேலும், இந்த ஆண்டிற்கான படைவீரர் கொடிநாள் 2022 நிதிவசூல் இலக்காக ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 44 லட்சத்து 47 ஆயிரம் மற்றும் மாநகராட்சிக்கு ரூ.4 லட்சத்து 39 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த ஆண்டும் இதேபோல் அதிக அளவில் கொடிநாள் நிதி வசூல் செய்திட வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களையும் மற்றும் தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்களையும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டார். மேலும், 2019-ம் ஆண்டில் ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக நிதி வசூல் செய்த மாவட்ட அலுவலர்களுக்கு அரசு முதன்மை செயலாளரால் வழங்கப்பட்ட 30 கிராம் வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 2021-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் கொடிநாள் நிதிவசூல் புரிந்த மாவட்ட அலுவலர்களையும் கலெக்டர் பாராட்டி பரிசு வழங்கினார்கள். தேநீர் விருந்து அதைத்தொடர்ந்து முப்படையினரின் தன்னலமற்ற சேவையினை நினைவுகூர்ந்து நன்றி பாராட்டும் வகையில் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரை அழைத்து கொடிநாளன்று மாவட்ட கலெக்டரால் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. மேலும், 23 பேருக்கு ரூ.5 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் தொகுப்புநிதி கல்வி உதவித்தொகையினையும், 8 பேருக்கு ரூ.43 ஆயிரத்து 448 மதிப்பீட்டில் கண்கண்ணாடி நிதி உதவியினையும் மற்றும் ஒருவருக்கு புற்றுநோய் நிவாரண நிதி உதவியாக ரூ.28 ஆயிரமும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, பிளைட் லெப்.ச.மணிவண்ணன் (ஓய்வு), முன்னாள் படைவீரர் நல அலுவலக துணை இயக்குனர் பிரிகேடியர். எஸ்.குமணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.