ஈரோடு பெரிய மாரயம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு இரண்டாம் மண்டல தலைவர் ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மரப்பாலம் சித்திக் திடல் பள்ளிவாசல் அருகில் உள்ள மண்டபத்தில் நான்காம் மண்டல தலைவர் *எச்.எம். ஜாபர் சாதிக்* தலைமையில் பேஷ் இமாம் உசேன் ஹஜ்ரத் அவர்கள் சிறப்பு கூட்டு துவா செய்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள சிஎஸ்ஐ பிரப் நினைவாலயத்தில் சி.பாஸ்கர்ராஜ் & இரா.கனகராஜன்* தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகில் ஆட்டோ ஸ்டேண்ட் முன்பு புதிதாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் *ஈ.எம்.சிராஜூத்தீன் கொடியேற்றினார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவா தள தலைவர் எஸ்.முகமது யூசுப் தலைமையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் *டி.திருச்செல்வம்* முன்னிலையில் மாவட்ட துணை தலைவர் *பா.ராஜேஷ் ராஜப்பா* கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம்.ஜவஹர் அலி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி எம் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்களான வி எம் கே செந்தில் ராஜா, நசியனூர் தீபா, மாவட்ட துணைத் தலைவர்களான அம்மன் மாதேஸ்வரன், பாபு என்கிற வெங்கடாஜலம், எம் ஆர் அரவிந்தராஜ், மாவட்ட பொது செயலாளர்களான டி. கண்ணப்பன், ஏசி சாகுல் அமீது, பாலதண்டாயுதம், சித்தோடு பிரபு, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தூர் ராஜகோபால், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக்,மாவட்ட சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என் பாஷா, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் நெசவாளர் அணி தலைவர் சி மாரிமுத்து,என் சி டபிள்யூ சி மாவட்டத் தலைவி ஆர் கிருஷ்ணவேணி, மகிளா காங்கிரஸ் எம்.பேபி,ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.விஜய் கண்ணா, ஈரோடு நகர காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குப்பண்ணா சந்துரு, மாவட்ட நிர்வாகிகளான கே ஜே டிட்டோ, சிவா என்கிற சிவகுமார், ஈரோடு கிழக்கு சட்டமன்ற சமூக ஊடக பிரிவு தலைவர் பிரவீன், ராஜாஜிபுரம் சிவா, சக்தி, குமரேசன், வெற்றிச்செல்வன், இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீபேர் அகமது, லயன் இப்ராஹிம், அமீர்கான், டீக்கடை லோகு, நூருதீன், வேன் ராமசாமி,கனிராவுத்தர் குளம் சபீர் அலி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.