Type Here to Get Search Results !

ஊர் பெயர்கள் ,பயணிகள் இருக்கைபொருத்தும் பணி தீவிரம்

 ஊர் பெயர்கள் ,பயணிகள் இருக்கை
பொருத்தும் பணி தீவிரம்

ஈரோடு
சோலார் பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த பஸ்நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் உள்ள பஸ்நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
ஈரோடு மாவட்டத்தின் மையப்பகுதியில் பஸ் நிலையம்செயல்பட்டு வருகிறது. சேலம், கோவை, திருப்பூர், பழனி மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கு இருந்து தான் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் ஒரேஇடத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் கடும் நெருக்கடி ஏற்பட்டு ஈரோடு பஸ்நிலையம் போக்குவரத்து நெரிசலில்சிக்கி தவித்து வருகிறது.

இதையடுத்து தென்மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வரும் பஸ்கள் நிற்க ஈரோடு சோலார் பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் தரைகள் சமன் செய்யப்பட்டு பஸ்கள் நிற்க தனிதனி ரேக்குகள், பயணிகள் அமர இருக்கைகள், கழிப்பறகைள் மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ஊர் பெயர்கள் பொருத்தும் பணி, பயணிகள் அமரும் இருக்கை, மின்வசதி ஆகியவை செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்ததும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இந்த பஸ்நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் உள்ள பஸ்நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.