Type Here to Get Search Results !

தலைமறைவான விநாயகமூர்த்தி பா.ஜனதா பிரமுகருக்கு வலைவீச்சு

தலைமறைவான பா.ஜனதா பிரமுகருக்கு வலைவீச்சு
ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கடன் வாங்கி மொபட்டை வாங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதற்கான தவணை கட்டப்படாமல் இருந்தது. இந்த நிலையில் செந்தில் குமார் வாங்கிய மொபட்டை ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஒரு செருப்பு கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு ள்ளதாக நிதி நிறுவன த்திற்கு தகவல் கிடைத்தது.
இதையொட்டி நிதி நிறுவன ஊழியர்கள் விக்னேஷ் குமார் (26)என்பவர் உள்பட 3 பேர் அந்த கடைக்கு சென்று அங்கு நின்ற மொபட்டை எடுக்க முயற்சி செய்தனர். அப்போது கடையில் இருந்த செருப்பு கடையின் உரிமையாளரும் பாரதீய ஜனதா கட்சி பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளருமான விநாயக மூர்த்தி அவர்களை தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் விக்னேஷ் குமாரை கடைக்குள் உள்ள ஒரு அறைக்கு இழுத்து சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் குமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விக்னேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கியதாக பாரதீய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி பொது செயலாளர் விநாயக மூர்த்தி மீது 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள். இதுபற்றி சூரம்பட்டி போலீசார் கூறும் போது இறந்த செந்தில் குமார் விநாயக மூர்த்தியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் கடன் வாங்கி யிருந்ததாகவும் இந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்காமல் இறந்து விட்டதால் செந்தில் குமாரின் வீட்டுக்கு சென்று ஸ்கூட்டரை எடுத்து வந்ததாவும் அந்த மொபட்டை தனது செருப்பு கடை முன்பு நிறுத்தி இருந்ததாகவும் கூறினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.