பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார்
ஈரோடு, டிச. 19-
ஈரோடு மாவட்டத்தில் பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்திருப்பதாவது, ஈரோடு மாவட்டம் முழுவதும் பேருந்துகள், சிற்றுந்துகள், ஆட்டோக்கள், சிற்றுந்துகள், பெரிய வியாபாரிகள், சிறுகுறு வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். பொதுமக்களும் ரூ.10க் கான நாணயத்தை வாங்க மறுத்து வருகின்றனர். பிச்சை கேட்போரும் வாங்க மறுக்கின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் மூலம் பத்திரிக்கை மூலம் விழிப்புணர்வு விளம்பரம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மனு கொடுக்கப்பட்டது. மேலும் இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியிட வேண்டும் மேலும் கலெக்டர் முறையிட்டது பின்பு அதற்கு உடனடியாக மாற்றி தர உத்தரவிட்டார் அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அந்த பணத்தை மாற்றப்பட்டது