*ஈரோடு மின் பகிர்மான வட்டம்.... பெருந்துறை கோட்டத்தில் மின் நுகர்வோருக்கான மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் நடைபெற்றது..
முகாமில் ஈரோடு மண்டல தலைமைபொறியாளர் திருமதி. கே. இந்திராணி அவர்கள் கலந்து கொண்டு பெயர் மாற்றம் செய்த மின் நுகர்வோருக்கு பெயர் மாற்ற உத்திரவினை வழங்கினார்கள்...
இந்நிகழ்வில் செயற்பொறியாளர் திரு. வாசுதேவன், உதவி செயற்பொறியாளர்கள் திரு. முருகன், சண்முகசுந்தரம், ரவிக்குமார், சீனிவாசன், திவ்யா, பெருந்துறை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் பல்லவி பரமசிவன்...உதவி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்....
இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.