துடுப்பதியில் டாஸ்மார்க் கடைவோண்டாம் கடையால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை
ஈரோடு மாவட்டகலெக்டர்அலுவலகத்தில் மனு கொடுத்தனர் அந்த மனு கூறியது பெருந்துறை அடுத்துள்ள துடுப்பதி டி. பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் பொது மக்கள் வந்து டாஸ்மார்க் கடையால் பிரச்சினை என்று மாவட்ட கலெக்டர் இடம் மனு கொடுத்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
எங்கள் கிராமப் பகுதியில் இருந்து தினந்தோறும் குழந்தைகள் 2 கிலோ மீட்டர் நடந்து துடுப்பதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்திற்கு சென்று வர வேண்டி உள்ளது.அவ்வாறு செல்லும் வழியில் துலுக்க பாளையம் என்ற ஊருக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம் மற்றும் ஒயின்ஷாப்பிற்கு அருகிலும் தினந்தோறும் அடையாளம் தெரியாத நபர்கள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் தகாத வார்த்தையில் பேசுவதும், கையை பிடித்து இழுப்பது,, சைக்கிளைப் பிடித்தும் இழுப்பதாகவும் எங்கள் ஊர் குழந்தைகள் கூறுகின்றனர்.இதனால் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்று பெற்றோர்களான எங்களுக்கு மிகவும் அச்சமாக உள்ளது. இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமாக உள்ளது. பள்ளிக்கு செல்லும் வழியில் ஒயின்ஷாப் அமைந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத வழியில் குடிகாரர்கள் தொந்தரவும், அடையாளம் தெரியாத நபர்களாலும் எதிர்பாராத விதமாக அவ்வப்போது குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை விரைவில் எடுத்து எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத முன்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்