பவானி சாகர் பகுதியில் சிப்காட் சிட்கோ தொழில் மையங்கள் அமைக்கப்படாது எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கு மட்டும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்துள்ளார்...
கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டுள்ள இடங்களில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.. அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
கீழ்பவானி அணையில் இருந்து 2000 கன அடி நீர் நேற்று திறக்கப்பட்டுள்ள நிலையில் 800 கன அடி நீர் உடைப்பு ஏற்பட்ட பகுதியை கடந்துள்ளது... திறந்து விடப்பட்ட 2000 கன அடி நீர் நாளை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
தற்காலிகமாக அமைக்கப்படவிருந்த சீரமைப்பு பணிகள் நிரந்தர தீர்வாகவும் தரமானதாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது..
புதிய கட்டிடங்கள் கட்டப்படும் பொழுது பார்க்கிங் உள்ளிட்ட சட்ட திட்டங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், அரசு தனியார் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் சட்டதிட்டங்களை கட்டாயம் கடைபிடித்தாக வேண்டும்..
கட்டுமான பணிகளுக்காக அனுமதி வாங்கிய பின்னர் அதிகாரிகள் ஆய்வு செய்வர், அதன் பின்னர் நிறைவு சான்றிதழ் பெறவேண்டும், குறைபாடுகள் கண்டறியப்பட்டால் மின் இணைப்பு உள்ளிட்ட எதுவும் வழங்கப்படாது என்றார்..
தொடர்ந்து பேசிய அவர் பவானிசாகர் பகுதியில் சிப்காட் மட்டும் சிட்கோ நிறுவனங்கள் அமைக்கப்படாது எனவும் விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் எந்த பணிகளும் நடக்காது என்றார்..