ஈரோடு,காளைமாட்டு சிலை வணிக வளாக கடைகள் பொது ஏலம் ஒத்திவைப்பு மாநகராட்சி
ஆணையாளா் சிவக்குமார் தகவல்
ஈரோடு, டிச. 13 -
ஈரோடு மாநகராட்சி காந்திஜி சாலை காளைமாட்டு சிலை அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.24.94 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் 62 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்த வணிக வளாகத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தார். இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகள், உணவகம், சிறுவர் விளையாட்டு அரங்கம், வாகன நிறுத்துமிடம் ஆகிய குத்தகையினங்களுக்கான பொது ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளி நாளை(புதன்கிழமை) நடத்தப்படுவதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் அறிவித்துள்ளார்.