திருட்டு இருவர் கைது.
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் சென்ற ரயிலில் சென்னையை சேர்ந்த மரியம்மா ஜான் என்ற மூதாட்டி பயணம் செய்துள்ளார்இந்த ரயில் ஈரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது மூதாட்டி மரியம்மா ஜான் வைத்திருந்த கைப்பை ஒன்று காணாமல் போயுள்ளது, அந்தப் பையில் 7 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் இருந்ததுடன், முக்கிய ஆவணங்களும் இருந்துள்ளன. இதையடுத்து தனது கைப்பை திருட்டு போயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, ஈரோடு ரயில் நிலையம் வந்தவுடன், இரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து ஓடும் ரயிலில் திருட்டில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த ராஜா, கரூரை சேர்ந்த கணேஷ்குமார் ஆகிய இரு இளைஞர்களிடம் விசாரணை நடத்தி காவல்துறையினர் அதிரடியாக அவர்களை கைது செய்தனர், பின் அவர்களிடம் இருந்து 7 பவுன் நகை மற்றும் செல்போன் மீட்டகப்பட்டது