Type Here to Get Search Results !

ஈரோடு வ.ஊ.சி. பூங்கா வில் பெரியார் கட்டிய தண்ணீர் தொட்டியை பார்வையிட்டு அதில் உள்ளராஜகோபாலாச்சாரியார் எனவும் கிழே

ஈரோடு வ.ஊ.சி. பூங்கா வில் பெரியார் கட்டிய தண்ணீர் தொட்டியை பார்வையிட்டு அதில் உள்ளராஜகோபாலாச்சாரியார் எனவும் கிழே E.V. ராமசாமி பெயரில் பொறிக்கப்பட்டுபார்வையிட்டார் திடீர் ஆய்வு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வ.ஊ.சி பூங்கா, சிறுவர் பூங்கா மற்றும் அரசு அருங்காட்சியகம் ஆகியவற்றை பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வ.ஊ.சி.பூங்கா பெரியார் கட்டிய தண்ணீர் தொட்டியை ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு அதில் உள்ளராஜகோபாலாச்சாரியார் என E.V. ராமசாமி பெயரில்பொறிக்கப்பட்டு ள்ளதை பார்வையிட்டார் பின்னர் ஈரோடு மாநகராட்சி மண்டலம்-2 ல் உள்ள வ.ஊ.சி பூங்காவில் தந்தை பெரியார் அவர்களால் கட்டப்பட்ட குடிநீர் தொட்டியினை பார்வையிட்டு, அருகில் உள்ள களைச் செடிகளை அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்திருக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பூங்காவினை சரியான முறையில் பராபரித்திடவும், சேதம் அடைந்த சிறுசிறு பகுதிகளை சீரமைக்கவும் உத்தரவிட்டார். மேலும், சிறுவர் பூங்காவில் பயன்பாடு இல்லாமல் உள்ள விளையாட்டு சாதனங்களை அப்புறப்படுத்தி புதியதாக சிறுவர்களை கவரும் வகையில் சாதளங்கள் அமைக்கவும் உத்தரவிட்டு, நாள் ஒன்றிற்கு சராசரியாக மொத்த பார்வையாளர்கள் குறித்தும் பார்வையாளர்களுக்கு முறையாக அனுமதி கட்டணச்சீட்டு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களின் புகைப்படங்கள், அருங்காட்சியக வெளியீடு மற்றும் நூல் விற்பனை, பழங்கால நாணயங்கள், பண்டைக்கால ஆயுதங்கள், தொல்லியல், கொடுமணல் அகழாய்வு பொருட்கள், மரச்சிற்பங்கள், தானியப்பானைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பூங்கா சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.