பவானிசாகரில் உத்தம தியாகி எம்.ஏ.ஈஸ்வரன்திருவுருவச்சிலை யுடன் கூடிய அரங்கம் அமையவுள்ள இடத்தினைமாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி
பார்வையிட்டார்
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் 06.09.2021 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில், 2021-2022ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, கொங்கு மண்டலத்தில் ஏறக்குறைய இரண்டு இலட்சம் ஏக்கர் பாசனம்பொறும் நீர்ப்பாசனத் திட்டமான கீழ்பவானி திட்டம் கொண்டு வர முக்கிய காரணகர்த்தாவாக இருந்த ஈரோடு தொகுதியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும், கதந்தர போராட்டத்தின் பங்கேற்று சுமார் 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த உத்தம தியாகி ஐயா உ திரு.ஈஸ்வரன் அவர்களது நினைவைப் போற்றும் வகையிலும், இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையிலும் ஈரோடு மாவட்டத்தில் அன்னாருக்கு திருவுருவச்சிலை மற்றும் அரங்கம் அமைப்பதற்கு ரூபாய் இரண்டு கோடியே அறுபது இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், முடுக்கன்துறை கிராமம், பவானிசாகரில் வார்டு A பிளாக் எண் 18 T.S NO.28/1A பொதுப்பணித்துறை புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ள 0.46.03 வெஹக். நிலத்தினை உத்தமத் தியாகி ஐயா ஈஸ்வரன் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கு திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.2,60,00,000 க்கு (ரூபாய் இரண்டு கோடியே அறுபது இலட்சம் மட்டும்) நிதியொப்பளிப்பு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
தொடர்ந்து, உத்தமத் தியாகி ஐயா ஈஸ்வரன் திருவுருவச் சிலையுடன்
கூடிய அரங்கம் அமையவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில்ஆய்வு மேற்கொண்டு, அரங்கத்தினை சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு கூடுதலாக திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்புமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, சத்தியமங்கலம் வட்டம், வெள்ளியம்பாளையம் புதூர், இக்கரைதத்தப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தினையும் மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மேலும், பயிர்கள் மற்றும் ஊடுபயிர்கள், முக்கிய மலர் சாகுபடியில் சம்பங்கி எவ்வளவு ஏக்கர் பயிரிடப்படுகிறது என்றும், விவசாய பயன்பாட்டிற்கான நீர் ஆதாரங்கள் குறித்து அலுவயர்களிடம் கேட்டறிந்தார்.