இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளையும் நேரில் ஆய்வு
கீழ் பவானி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்தலை மாவட்ட ஆட்சித்தலைவர்கிருஷ்ணனுன்ணி தொடங்கி வைத்தார்
ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பவானிசாகரில் செயல்படும் அரசினர் மாணவர் விடுதியினை பார்வையிட்டு இங்கு 11 மாணாவர்கள் தங்கி பயின்று வருகின்றனர் எனவும், கட்டிடம் வர்ணம் பூச திட்டமிட்டு அரசுக்கு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், விடுதியில் தேவையில்லாத பொருட்களை அகற்றி சுத்தமாக வைத்துக் கொள்ளமாறு விடுதி காப்பாளருக்கு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுன்ணிஅறிவுரை வழங்கினார்.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.