இக்குளமானது மொத்தமாக 196 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளோடு பறவைகள் சரணாலயம் குளத்தில் இருந்து நீரைக் கொண்டு இக்குளம் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் இப்பொழுது சுற்றுலாத்தலமாக்கும் வகையில் படகுகள் இயக்கவும், மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை முறையாக அகற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குளத்தை சுற்றியுள்ள பகுதிகளை வேளாண்மைத் - உழவர் நலத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆகிய துறைகளின் சார்பில் இயந்திரங்கள் மூலமாக தூய்மைப்படுத்த அலுவலர்களுக்குஅறிவுறுத்த ப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள மேல்நிலைத நீர்த்தேக்க தொட்டி உள்ள குடிநீர் குழாய்களை சீரமைக்கவும் மற்றும் குளக்கரைகளை பலப்படுத்தி சாலை அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மேலும், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் மூலம் படகு இல்லம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவைகளை அமைக்க தேவையான கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கையாக சமர்ப்பிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நீர் வரத்து பகுதியான இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பு பலகையினை வைத்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் நீர்வரத்து முகப்பு பகுதியில் ஒரு வளைவு ஆர்ச் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர், கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பசுமை குழுவின் மூலமாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். அதனை விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நில வருவாய் ஆய்வாளர் (பூந்துறை உள்வட்டம்) அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களை நேரில் சென்று பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே,சரஸ்வதி, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழுத்தவைர் கணபதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் மணி, மொடக்குறிச்சி வட்டாட்சியர் சண்முகசுந்தரம், ஊரக வளர்ச்சித்துறை உதவி பொறியாளர்ரமேஷ், மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், சரவணன், அவல்பூந்துறை பேரூராட்சி தலைவர் சித்ரா, குளூர் ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.