ஈரோட்டில்மகப்பேறுமருத்துவமனை களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மகப்பேறு இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள கோகிலா சேகர் மருத்துவமனையில் சில குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 15 நாட்கள் உள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களிடம் அதிக கட்டணங்களை பெற்றுக் கொண்டு தரமற்ற சிகிச்சையினால் பல உயிரிழப்புகள் நடைபெற்று வரும் இந்த வேளையில் இன்னமும் ஆய்வை அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.