மூன்று நாட்களுக்குள் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேரும்
இரு கரைகளிலும் ஏற்பட்ட உடைப்பினை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு
பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு பகுதியில் கீழ்பவானி பாசன வாய்க்கால் கரைகள் உடைந்த பகுதிகளை பார்வையிட்ட தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி பவானிசாகர் பகுதியில் சிப்காட் அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை எதிர்காலத்திலும் விவசாயிகள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தாத என செய்தியாளர்களுக்கு பேட்டி
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு பகுதியில் கீழ்பவானி பாசன வாய்க்காலில் இரு கரைகளிலும் ஏற்பட்ட உடைப்பினை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது நாளைக்குள் பணியில் முழுமையாக முடிக்கப்பட்டு சனிக்கிழமை கீழ்வானி பாசன வாய்க்கால் தண்ணீர் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தண்ணீர் திறந்த மூன்று நாட்களுக்குள் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேரும் என எதிர்பார்க்கின்றோம். கரை உடைப்பினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கல் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த கணக்கெடுக்கப்பட்டு வருகிறது அவற்றிற்கு அரசின் சார்பில் இழப்பீடு வழங்கப்படும். பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் இடையில் நிறுத்தப்பட்டதால் விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப தண்ணீர் திறப்பு நீட்டிக்கப்படும். பவானிசாகர் பகுதியில் சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்துவது என்ற செய்தி முழுமையாக தவறாக விவசாயிகளும் பரப்பப்பட்டுள்ளது. உண்மையில் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தற்போதைக்கு அது போன்ற எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை எதிர்காலத்திலும் விவசாயிகள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசுசெயல்படுத்தாது என கூறினார்
பேட்டி: முத்துசாமி - வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர்