Type Here to Get Search Results !

புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

*ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் - மாநில பொருளாளர் ஜே.எம்.ஹசன் பாபு  பங்கேற்பு!*
*********************************************
ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தின் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய கோரியும், பழைய 44 தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த கோரியும், தமிழக அரசின் தொழிலாளர் மீதான அபராத தொகையை கைவிட வலியுறுத்தியும் சோசியல் டெமாக்ரடிக் ட்ரேடு யூனியன் (எஸ்.டி.டி.யூ) தொழிற்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஆட்டோ.அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தஸ்தகீர் வரவேற்புரையாற்றினார்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் முனாஃப் முன்னிலை வகித்தார்.

எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தின் மாநில பொருளாளர் ஜே.எம். ஹசன் பாபு மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் அ.சாகுல் ஹமீது ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இதில் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க கிருஷ்ணா தியேட்டர் கிளை தலைவர் ராஜா, தாலுக்கா அலுவலக கிளை செயலாளர் சலீம், புதிய பேருந்து நிலைய கிளை தலைவர் யூசுப், ரத்த தான பாசறை பொறுப்பாளர் இப்ராஹிம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.