Type Here to Get Search Results !

கிராமப்புற பகுதி மக்களின் நலன் கருதி ஈரோடு ரோட்டரி அரிமா சங்கம் சார்பில்ஈரோட்டில் நடமாடும் மின் மயானம் அறிமுகம்

ஈரோடு மாவட்ட கிராமப் பகுதி மக்களின் வசதிக்காக தமிழ்நாட்டில் முதன் முறையாக உடல் தகனம் செய்ய பயன்படும்
  நடமாடும்  எரியூட்டு வாகனம்  (ரோட்டரி சங்கம்)தொண்டு நிறுவனம் அறிமுகம் செய்தது
- - - - - - - - - - - - - - - - - - - - -

ஈரோடு அடுத்த கருங்கல்பாளையம் காவிரி கரையில் ரோட்டரி அரிமா சங்கத்தின் மின் மயானம் அமைந்துள்ளது...

ஈரோடு  மாநகர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் உடல்களை தகனம் செய்ய பெரும்பாலானோர் இதனை பயன் படுத்தி வருகின்றனர்...

ஈரோடு மாநகராட்சி பகுதியை தாண்டி வசிக்கும் பெரும்பாலான கிராமப்புற மக்கள் தங்களின் பகுதிகளில் அமைந்துள்ள மயானங்களில் விறகு சாணம் கொண்டு எரியூட்டி அஸ்தியை எடுப்பதற்கு 8 மணி நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது

மழைக்காலங்களில் பெரிதும் சிரமப்படுகின்றனர் கிராமப்புற பகுதி மக்களின் நலன் கருதி ஈரோடு ரோட்டரி அரிமா சங்கம் சார்பாக நடமாடும் மின் மயானம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூபாய் 7500 கட்டணத்தில் இருப்பிடத்திற்கே சென்று தங்களின் விவசாய நிலங்களில் தங்கள் உறவினர்களின் உடல்களை தகனம் செய்யும் வகையில் நடமாடும் எரியூட்டு வாகனம் அமைக்கப் பட்டுள்ளது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.