அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரியம் ,சென்னை நடத்திய தடகள போட்டியில் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி சிறப்பிடம் பெற்றது.அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரியம் மண்டல வாரியாக விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.அண்ணா பல்கலைக்கழக மண்டலம் 12,ஈரோடு மண்டலத்திற்கான தடகள போட்டி ஈரோடு மாவட்டம் சத்தியில் உள்ள பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது .
இந்த போட்டியில் 20 மேற்பட்ட கல்லூரிகள் கலந்துகொண்டது.
நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ரிலே, குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றனர்.ஈட்டி எறிதல் போட்டியில் இரண்டாம் ஆண்டு மேலாண்மைத் துறையில் பயிலும் மாணவர் அஜய் முதலிடம் வென்றார்.இரண்டாம் ஆண்டு மேலாண்மைத் துறையில் பயிலும் மாணவி ஆர்த்தி நீளம் தாண்டுதல் மற்றும் 400 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் முதலிடம் வென்றார்.4x400 ரிலே போட்டியில் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆர்த்தி, ஆனந்தி , தமிழரசி மற்றும் அஞ்சலி ஆகியோர் இரண்டாம் இடம் வென்றனர்.இரண்டாம் ஆண்டு மேலாண்மைத் துறையில் பயிலும் மாணவி ஆனந்தி 5000 மற்றும் 10000 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடம் வென்றார். மேலும் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி கலந்துகொண்ட கல்லூரிகளுக்கிடையே ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் 4வது இடம் வென்றது.
பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் கோபாலகிருஷ்ணன் , கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் காங்கேயம் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் C .வெங்கடேஷ் காங்கேயம் குழும நிறுவனங்களின் நிர்வாகிகள் தலைவர் . N . ராமலிங்கம் , செயலாளர் C. K . வெங்கடாச்சலம் , பொருளாளர் C .K . பாலசுப்ரமணியம் மற்றும் தாளாளர் S . ஆனந்த வடிவேல் ஆகியோர் மாணவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் .