Type Here to Get Search Results !

மாணவர்களை விளையாட விடுங்க. வேறு வகுப்புகள் கூடாது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டிப்பு


மாணவர்களை விளையாட விடுங்க. வேறு வகுப்புகள் கூடாது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டிப்பு 
 பயிற்சி பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் சார்பில் நடைபெறும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர் ஆசிரியர்களுக்கான பயிற்சி ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- இந்த திட்டத்தின் படி தமிழகத்தில் கல்வி அறிவு இல்லாத 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கல்வி அறிவு புகட்ட இலக்காக வைத்துள்ளோம். ஈரோடு மாவட்டத்தில் வயது வந்தோர் கல்வி திட்டத்தில் 23 ஆயிரத்து 598 பேருக்கு எழுத்தறிவு அளிக்கப்பட இருக்கிறது. இதற்காக 14 ஒன்றியங்களில் 1,400 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். எல்ேலாருக்கும் எழுத்தறிவு என்பதுதான் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் திட்டமாக, நோக்கமாக இருக்கிறது.மாணவர்களை விளையாட விடுங்க. வேறு வகுப்புகள் கூடாது

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். விளையாட்டு தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:- பள்ளிக்கூடங்களில் விளையாட்டுக்கான நேரத்தில், மாணவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும். அப்போது வேறு பாடங்கள் எடுக்கக் கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறோம். விளையாட்டு மாணவ- மாணவிகளுக்கு புத்துணர்ச்சியை தரும். எனவே பள்ளி மாணவ- மாணவியருக்கு 24 வகையான விளையாட்டுகளில், வட்டார, மாவட்ட, மாநில அளவிலான 208 விதமான போட்டிகளை நடத்தி இருக்கிறோம். இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழகம் மாற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். அமைச்சர் வழங்கும் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவோம். மாநில கல்விக்கொள்கை மாநில கல்வி கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்டு உள்ள குழுவினர் துறை சார்ந்தவர்களின் கருத்துக்களை பெற்று உள்ளனர். தனியார் பள்ளிக்கூட நிர்வாகிகளின் கருத்துகளும் பெறப்பட்டு உள்ளன. டிசம்பர் இறுதியில் அறிக்கை தயார் செய்யப்பட்டு ஜனவரி மாதம் முதல்-அமைச்சரிடம் தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறார்கள். அதனை முதல்-அமைச்சர் முழுமையாக ஆய்வு செய்து மாநில கல்விக்கொள்கை தொடர்பான கருத்துக்களை அறிவிப்பார். பள்ளிக்கூட மாணவர்களிடயே போதைப்பழக்கத்தை தடுக்க தமிழக முதல்-அமைச்சர் 3 முறை ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை கூட்டி இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் இதனைக் கண்டு கொள்ளவில்லை. எனினும் இதனை சரிப்படுத்தும் பணியை நாம் செய்வோம் என முதல்-அமைச்சர் கூறி உள்ளார். தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடுத்து வருகிறார். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.