Type Here to Get Search Results !

கோபி அருகே உள்ள கணபதிபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாரியம்மன் திருக்கோயில் கட்ட்படுவதற்கான பூமி பூஜையில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலம் கலந்துகொண்டு கட்டிடப் பணிகளை துவங்கி வைத்தார்

கோபி அருகே உள்ள கணபதிபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாரியம்மன் திருக்கோயில் கட்ட்படுவதற்கான பூமி பூஜையில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலம் கலந்துகொண்டு கட்டிடப் பணிகளை துவங்கி வைத்தார் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் சிதிலமடைந்து வழிபாடு நடத்தமுடியாத நிலையில் இருந்து வந்ததால் இக்கோயிலுக்கு புதிதாக கர்ப்ப கிரகம் மற்றும் அர்த்த மண்டபம் அமைத்துக்கொள்ள அறநிலையத்துறை அனுமதியளித்தது. இதனையடுத்து கணபதிபாளையம் மாரியம்மன் கோவில் திடலில் புதிய கோயில் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை பேராசிரியர் குருசாமி சித்தர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேவேந்திர மடாதிபதி மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலம் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு புதிய கோயில் கட்டுவதற்கான பணிகளை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் உபயதாரர்கள் மாரியப்பன் , ஜெயராமகிருஷ்ணன்,சந்திரமோகன் மற்றும் ஊராட்சி மன்றதலைவர் சுரேஷ்குமார் மற்றும் இந்து அதிரடிப்படையின் நிறுவனர் ராஜகுரு உப்பட ஊர் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.